E-bike வைத்துள்ளீர்களா அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குதான்!

NEW ANNOUNCEMENT FOR E-CHARGING FROM TN GOVERNMENT

சமீபகாலமாக E-Bike இன் உபயோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் நம்மில் பல பேர் பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக E-Bike கு மாறி விட்டோம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் E-Bike விற்பனையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் ரீசார்ஜிங் ஸ்டேஷன் நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் தேவையான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment